நாட்டின் பெரும்பாலான பகுதிகள் புரட்சிக்காரர்களின் தேசிய மாற்று கவுன்சில் வசம் வந்துள்ளன. இந்நிலையில் தலைநகர் திரிபோலி சிறையில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை கொன்று புதைத்துள்ள மிகப்பெரிய கல்லறையை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து இடைக்கால அரசு அதிகாரிகள் கூறுகையில், ÔÔகடந்த 96ம் ஆண்டு கடாபி ராணுவத்தினர் ஏராளமான மக்களை கொன்றுள்ளனர்.
திரிபோலியில் அவர்களை புதைத்துள்ளன. அந்த கல்லறையில் 1,270 பேரின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. திரிபோலியில் அந்த ஆண்டு 2000க்கும் அதிகமானவர்களை கொன்று புதைத்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கணக்கெடுத்துள்ளன என்றனர். இறந்தவர்களை அடையாளம் காண முயற்சி மேற்கொண்டுள்ளளோம். காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ சோதனை செய்து ஒப்பிட்டு வருகிறோம் என்று தலைமை மருத்துவர் உஸ்மான் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக