ஈரோட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள, ஆப்ரிக்க சாம்பல் நிற கிளி, 120 விதமாக ஒலியெழுப்புகிறது. இதன் விலையைக் கேட்டதும், மக்கள் அதிர்ச்சியடைகின்றனர். இந்தியாவில் அதிகப்படியான மக்கள் வீடுகளில் வளர்க்கும் பறவை கிளி ஆகும். தவிர, ஜோதிடம் பார்க்கவும் கிளியை பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகளை அதிகம் கவரும் பறவை கிளி என்பதால், அவற்றை வாங்கி, கூண்டுகளில் வளர்க்கின்றனர்.
சாதாரண கிளிகள், பஞ்சவர்ண கிளிகள், வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் வெள்ளை, நீல வண்ண சிறிய கிளிகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை, பலர் தொழிலாக கொண்டுள்ளனர்.
ஈரோடு கனி மார்க்கெட்டில், பறவைகள் விற்பனை கடையில், ஆப்ரிக்காவை சேர்ந்த சாம்பல் வண்ண கிளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுவாகவே கிளிகள் பேசும் திறன் கொண்டவை. அதிலும், ஆப்ரிக்க காடுகளில் வாழும் சாம்பல் வண்ணக் கிளிகள், மனிதர்கள் பேசும்போது, ஒலியை துல்லியமாக கவனித்து, மீண்டும் உச்சரிக்க கூடியவை.
120 வகையான ஒலிகளை எழுப்பக் கூடியவை. நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டவை. இவற்றின் ஆயுள் காலம், 80 முதல், 95 ஆண்டு. சாதாரணமாக பஞ்சவர்ணக் கிளிகள், 500 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரையான விலையில் உள்ளன. ஆனால், ஒரு வயதான சாம்பல் கிளி விலை, 35 ஆயிரம் ரூபாய். நன்கு வளர்ந்த கிளி, ஒரு லட்சம் ரூபாய் வரை விலை கூறப்படுகிறது. வீடுகளில் அழகுக்காகவும், பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வாஸ்துக்காகவும் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக