ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இலை மலர்ந்தால் மோடி ஆட்சி மலரும்-- துக்ளக் “சோ”

த-மு-மு-க & ம -ம - கட்சி கவனதிற்கு
தமிழகத்தில் மாநாடு நடத்துவது என்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது அதுவும் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைப்பதில் தொகுதி ஒப்பந்தங்களை தீர்மாணிக்க கூடிய இடத்தில் மாநாடுகள்
எல்லோரும் மாநாடு நடத்துகிறார்கள்....ஆனால் பார்ப்பனர்களால் ஒரு பொதுக்கூட்டம் கூட போடமுடியவில்லையே என்ற ஆதங்கத்தை போக்கும்வண்ணம் பார்ப்பனர்களால், பார்ப்பனர்களுக்காகவே பார்ப்பன அரசியல் சகுனி துக்ளக் சோ அவர்கள் தலைமையில் துக்ளக் 41 ஆண்டு விழா (Thuglak 41th anniversary)நடைபெற்றது. அதன் முழு ஒளிபரப்பையும் ஜெயலளிதாவின் ஜெயா தொலைக்காட்சியில் காணமுடிந்தது.
முழுக்க முழுக்க பிராமனர்களின் சூழ்ச்சி மூளைகள் எல்லாம் ஒன்று திரண்டு அடுத்தக் கட்ட அரசியல் நகர்வுகளை மிகவும்  நேர்த்தியாக நகர்த்துவது மிகவும் தெளிவாக புரிகின்றது.
மனித இனம் மன்னிக்க முடியாத நரபலி வெறியன் நரேந்திரமோடியின் புகழ் மிகவும் வெளிப்படையாகவே போற்றப்பட்டது.  இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் நரேந்திரமோடியின் ஆட்சி வரவேண்டும் என்றும்        தமிழகத்தில் செல்வி ஜெயலளிதா அவர்களை முதல்வராக்குவதன் மூலம் நரேந்திர மோடியின் ஆட்சியை அமைக்கலாம் என்றும் மோடி ராஜ்ஜியம் அமைக்க முன்னறிப்பு செய்யப்பட்டது.
நரேந்திர மோடியின் ஆளுமையையும் ,ஜெயலளிதாவின் ஆளுமையும் ஒப்பிட்டு இந்த ஆளுமையும் திறமையும் தான் நம் நாட்டுக்கு தேவை என்று சோ அவர்கள் வழியுறுத்தினார். மன்மோகன் சிங்கை மிகவும் பலகீனமான பிரதமர் என்றும் அத்வானி மிகவும் கம்பீரமான எதையும் துணிந்து செய்யும் ஆளுமைமிக்கவர் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் ஊடகங்களில் பார்ப்பனரல்லாதோரின் ஆளுமை அதிகரித்து வருபதை பற்றியும் கேள்வி பதில் ஒன்றில் பேசப்பட்டது. காஷ்மீரத்தை அடக்கி ஒடுக்காமல் இந்திய அரசாங்கம் மந்தமாக செயல்படுகிறது என்ற காவிகளின் குற்றச்சாட்டை ஒப்பித்தார் துக்ளக் சோ. அருந்ததி ராயை ஒரு தேசத்துரோகி என்பது போல் விமர்சிக்கப்பட்டார். 2G அலைக்கற்றை விவகாரத்தில் உள்ள காங்கிரஸ்- திமுக உறவினையும், சோனியாவிற்கு வெளி நாடுகளில் கருப்பு பணம் இருப்பதையும் சோவும் இந்துத்துவ எழுத்தாளர் குருமூர்த்தியும் விளாசித் தள்ளினார்கள். நிச்சயமாக கருணாநிதி காங்கிரஸ் எதிர்ப்பாளர்களுக்கு நிச்சயம் கரும்பு சாப்பிட்டது போலத்தான் இருக்கும்.
இதில் 2Gஅலைக்கற்றை விவகாரத்தில் பிஜெபி மிகவும் நேர்மையாக நடந்து கொண்டது என்றும் குருமூர்த்தி அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார்.
ஜெயலளிதாவின் நரேந்திரமோடி ஆட்சி அமைக்க திமுக காங்கிரஸ் கூட்டணியை ஒன்று பட்டு எதிர்க்க எல்லா கட்சிகளும் ஒன்றினைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என அறிவுறை கூறப்பட்டது.
ரஜினி திமுகவின் ஆட்சியை எதிர்க்கும் தைரியம் உள்ளது என்றும் அவர் திமுக வை எதிர்த்து குரல் கொடுக்கலாம் என்றும் சோ அவர்களால் ஆருடம் செய்யப்பட்டது.
விஜகாந்த் அவர்கள் அதிமுக கூட்டணியில் இனையவேண்டும் அது ஒன்றுதான் வழி என்றும் சோ அவர்கள் கூறினார்.
இயல்பாகவே தமிழகத்தில் உள்ள திமுக ,காங்கிரஸ் வெருப்பு அரசியலை தூண்டிவிட்டு அதன் வெற்றியை இந்துத்துவத்தின் வெற்றியாக்கவும் பெரும் திட்டங்கள் நடைபெறுவது தெரிகின்றது.
சுப்ரமனியம் சுவாமி, குருமூர்த்தி, சோ ராமசாமி, ஜெயலளிதா,  நரேந்திரமோடி ,அத்வானி என்ற கூட்டணி ஒன்று இயல்பாகவே இனைந்து இருப்பதும் அவற்றின் அரசியல் நகர்வு இராம ராஜ்ஜியத்தினை நோக்கியும் நகர்வது மிகத்தெளிவாகவே தெரிகின்றது.
பாவம் செந்தமிழனும் , பேராசிரியர்களும், பொதுவுடமை தொழர்களும், திராவிடம், தமிழ் ஈழம் பேசுபவர்களும் இலை மலர்ந்தால் மோடி ஆட்சி மலரும் என்று பிரச்சாரம் செய்ய போகும் நிலையை நினைத்தால்
இப்பவே கண்ணை கட்டுதே!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக