நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய மெயில் இது.இந்தியாவுல ஏன் இவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா?னு கேட்டு அதைப்பற்றி காமெடியா ஒரு விளக்கம் கொடுத்திருக்காங்க.தேவைப்பட்ட இடத்துக்கு மட்டும் தமிழ்ல மொழி பெயர்த்திருக்கேன்.ஒரு வெளை இதை ஏற்கனவே பார்த்திருந்தால் ரிப்பீட் ஆடியன்ஸாக ரசிக்கவும்.
இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடி,அதுல 9 கோடி பேரு ரிட்டயர் ஆகிட்டாங்க.37 கோடி பேரு மாநில அரசில் பணி புரிகிறார்கள்.20 கோடி பேரு நடுவண் அரசில் பணி புரிகிறார்கள்.(மத்திய அரசுன்னு சொன்னா டாக்டர் ராம்தாஸ்க்கு கோபம் வந்துடும்.)
2 பிரிவுலயும் யாரும் வேலை செய்யறதில்லை. ஐ டி ல (அதாவது தகவல் தொழில் நுட்பம் எனப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி )1 கோடி பேரு இருக்காங்க.ஆனா அவங்க இந்தியாவுக்காக வேலை செய்யறதில்லை.25 கோடி பேரு ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ். 1 கோடி பேரு குழந்தைங்க.(5 வயசுக்கும் கீழ).15 கோடி பேரு வேலை இல்லா பட்டதாரிகள்.1 கோடியே 20 லட்சம் பேரு எப்பவும் ஹாஸ்பிட்டலே கதினு இருக்காங்க.79,99.998 பேரு ஜெயில்ல களி சாப்பிட்டுட்டு இருக்காங்கன்னு ஒரு நிலையியல் புள்ளி விபரம் சொல்லுது.மிச்சம் இருக்கறது நீயும் ,நானும் மட்டும்தான்.நீ வெட்டியா மெயிலை படிச்சுட்டு ,அதை ஃப்ரண்ட்ஸ்க்கு ஃபார்வர்டு பண்ணிட்டு இருக்கே.நான் மட்டும் தனியா இந்தியாவை எப்படி காப்பாத்தறது?அதான் மடேர் மடேர்னு தலைல அடிச்சுக்கறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக